Showing posts with label வெயிலின் தாக்கம். Show all posts
Showing posts with label வெயிலின் தாக்கம். Show all posts

Monday, 20 August 2012

வெயிலின் தாக்கம்

 தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ.... 

பூசணிக்காய் தயிர்அவல்:

தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - 1
அவல் - 1 கிலோ
தயிர் - 4 லிட்டர்
நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்

உப்பு, மிளகு - தேவையான அளவு


செய்முறை:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.

* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்
.
* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!

* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.

 கேரட் சாலட்

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கிலோ
முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கப்
எலுமிச்சம்பழம் - 1
நறுக்கிய குடை மிளகாய் - 50 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கட்டு
உப்பு, மிளகுப்பொடி - தேவைக்கு ஏற்ப

  

செய்முறை:

* திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

* அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.

* ஆரோக்கிய குளிர்ச்சியான உணவு ரெடி!